97 வயதில் மேற்படிப்பை முடித்த அமெரிக்கப்பாட்டி
சுமார் 79 ஆண்டுகளுக்கு முன்பாக உயர் கல்வியை கைவிட்ட அமெரிக்காவை சேர்ந்த பாட்டி ஒருவர் தனது 97ம் வயதில் அதே உயர்நிலை கல்வியை முடித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார். 1936-ம் ஆண்டு அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள கிராண்ட் ராபிட்ஸ் நகரின் கத்தோலிக் சென்ட்ரல் ஹைஸ்கூலில் படித்து வந்தார் மார்கரெட் தாமஸ் பெக்கெமா. ஹைஸ்கூலுக்கு வந்த முதல் வருடத்திலேயே கேன்சரால் பாதிக்கப்பட்ட அவரது அம்மாவைப் பார்த்துக் கொள்வதற்காக பள்ளிப்படிப்பை பாதியிலேயே கைவிட்டார். இந்நிலையில், இவரது நண்பர்களும் உறவினர்களும் கடந்த கோடைகாலத்தில் மார்கரெட் படித்த உயர்நிலைப்பள்ளியை தொடர்பு கொண்டு தங்கள் பாட்டியின் கதையைக் கூறியுள்ளனர். இவர்களது கதை ஊடகங்களிலும் வெளியாகியிருந்தது. இந்நிலையில், உயர்நிலைப்பள்ளியைக் கூட முடிக்க முடியாததால் வருத்தப்படும் பாட்டிக்காக, கவுரவ டாக்டர் பட்டம் கொடுக்க அந்தப் பள்ளி முடிவு செய்தது. இதையடுத்து, கடந்த 29-ம்தேதி அவரது நண்பர்கள் மற்றும் உறவினர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடந்த விழாவில் அவர் இந்தப் பட்டத்தை பெற்றுக்கொண்டார். “நான் ஒன்றுமே தெரியாதவள். என்னுடைய சந்தோஷத்தை எப்படி வெளிப்படுத்துவ தென்றே தெரியவில்லை.” என்று விழாவில் மனமுருகியிருகின்றார் பாட்டி மார்கரெட்..