என்ன செய்தாலும் முடியவில்லையே, நமீதாவிடம் டிப்ஸ் கேட்கலாமா?: யோசனையில் அனுஷ்கா
இஞ்சி இடுப்பழகி படத்திற்காக ஏற்றிய உடல் எடையை குறைக்க அனுஷ்கா கஷ்டப்படுகிறாராம். பேசாமல் நமீதாவிடம் ஐடியா கேட்கலாமா என்று யோசித்துக் கொண்டிருக்கிறாராம். பூசினாற் போன்று இருந்த அனுஷ்கா இஞ்சி இடுப்பழகி படத்திற்காக குண்டாக ஆனார். குண்டாக இருப்பதும் அழகே என்று கூறி வரும் அனுஷ்கா பாகுபலி 2 படத்திற்காக உடல் எடையை குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். உடல் எடையை குறைக்க முயன்றும் முடியாமல் போனதால் அவர் அமெரிக்காவுக்கு சென்றுள்ளார். அங்கு சிகிச்சை மூலம் எடையை குறைக்க திட்டமிட்டுள்ளார். இருப்பினும் அவரின் உடல் எடை குறைவதில் சிக்கலாக உள்ளதாம்.



