Breaking News

கிட்சி கிண்ட காடன் ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் 1வது வருட மாணவர் வெளியேறும் விழா-படங்கள்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

மட்டக்களப்பு-ஒட்டமாவடி மீராவோடை கிட்சி கிண்ட காடன் ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் 1வது வருட மாணவர் வெளியேறும் விழா நேற்று (21-12-2015) திங்கட்கிழமை மாலை ஒட்டமாவடி மீராவோடை அல்-ஹிதாயா மகா வித்தியாலயத்தில் இடம்பெற்றது.

கிட்சி கிண்ட காடன் பாலர் பாடசாலையின் பொறுப்பாசிரியை திருமதி. ஏ.எல்.ஹில்மியா தலைமையில் இடம்பெற்ற மேற்படி விழாவில் பிரதம அதிதியாக, மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுவின் தலைவரும், கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சருமான சட்டத்தரணி எம்.எஸ்.எம்.அமீர் அலி கலந்து கொண்டார்.

இதன் போது நிகழ்வின் பிரதம அதிதியினால் கிட்சி கிண்ட காடன் ஆங்கில மொழி மூல பாலர் பாடசாலையின் ஒரு வருடம் பாலர் கல்வி பயின்று வெளியேறும் சிறுவர், சிறுமிகளுக்கு கிண்ணமும், சான்றிதழும், பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கிட்சி கிண்ட காடன் பாலர் பாடசாலை மாணவ, மாணவிகளின் ஆற்றல்களைப் பிரதிபலிக்கும் வகையில் ஆங்கிலப் பேச்சு, சிங்களப் பேச்சு, ஆங்கில மற்றும் தமிழ் பாடல், கஸீதா உட்பட பல்வேறு கலை, கலாசார நிகழ்வுகள் இடம்பெற்றன.

இப் பாலர் பாடசாலையின் மாணவர் வெளியேறும் விழாவில் கௌரவ மற்றும் சிறப்பு அதிதிகளாக ஒட்டமாவடி பிரதேச செயலகத்தின் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எச்.எம்.எம்.றுவைத், ஒட்டமாவடி பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் ஐ.ரீ.அஸ்மி, மீராவோடை கிழக்கு சனசமூக நிலையத் தலைவர் கே.எம்.நிஜாமுதீன், கல்குடா மீடியா போரத்தின் தலைவர் ஊடகவியலாளர் எம்.ரீ.எம்.பாரிஸ் உட்பட ஊர் பிரமுகர்கள், கிட்சி கிண்ட காடன் பாலர் பாடசாலை மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.