Breaking News

டெல்லியில் எல்லை பாதுகாப்புப் படையின் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து- 4 பேர் பலி

டெல்லியில் எல்லைப் பாதுகாப்புப் படையின் சிறிய ரக விமானம் விழுந்து விபத்துக்குள்ளானதில் 4 பேர் பலியாகி உள்ளனர். விமானம் விபத்துக்குள்ளான இடத்தை உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் பார்வையிட விரைந்துள்ளார்.

டெல்லியில் இருந்து ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சிக்கு எல்லைப் பாதுகாப்பு படை (பி.எஸ்.எப்) அதிகாரிகளுடன் சிறிய ரக விமானம் இன்று காலை 9.45 மணியளவில் புறப்பட்டுச் சென்றது. அது புறப்பட்ட சிறிது நேரத்திலேயே அதாவது 10 நிமிடங்களிலேயே மேற்கு டெல்லியின் துவாரகா அருகே பட்போலா என்ற கிராமத்தில் கட்டிடம் ஒன்றின் மீது மோதி விபத்துக்குள்ளானது.