மில்க் பியூட்டி தமன்னாவிற்கு 26 வயசாச்சு
தமிழ் சினிமாவின் மில்க் பியூட்டி என்று அழைக்கப்படும் நடிகை தமன்னா இன்று தனது 26 வது பிறந்தநாளில் அடியெடுத்து வைத்திருக்கிறார். மகாராஸ்டிரா மாநிலம் மும்பையில் சந்தோஷ் - ரஞ்சனி பாட்டியா தம்பதிகளுக்கு 1989 ம் வருடம் டிசம்பர் மாதம் 21 ம் தேதி தமன்னா மகளாகப் பிறந்தார்.
15 வயதில் 2005 ம் ஆண்டு தனது 15 வது வயதில் சந்த் ஸா ரோஷன் சேரா என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவில் தமன்னா அறிமுகமானார். அதே ஆண்டு ஸ்ரீ என்ற படத்தின் மூலம் டோலிவுட்டிலும் இவர் கால் பதித்தார்.



