Breaking News

தென்னிலங்கை காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 5வது மௌலவி,ஹாபிழ் பட்டமளிப்பு விழா

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

இலங்கையின் தென் மாகாணத்தில் காலி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக இயங்கிவரும் காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியின் 5வது மௌலவி,ஹாபிழ் பட்டமளிப்பு விழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 14ம் திகதி வெகு விமர்சையாக இடம்பெறவுள்ளதாக காலி இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரின் அதிபர் மௌலவி அஷ்ஷெய்க் டப்ளியூ.தீனுல் ஹசன் பஹ்ஜி தெரிவித்தார்.

மேற்படி பட்டமளிப்பு விழா தொடர்பில் கல்லூரி அதிபர் கருத்து தெரிவிக்கையில் 2011 ம் ஆண்டு தொடக்கம் 2015ம் ஆண்டு காலப்பகுதிகளில் எமது இப்னு அப்பாஸ் அரபுக் கல்லூரியில் இஸ்லாமிய சரீஆ கல்வியை பூர்த்தி செய்த 49 மாணவர்கள் மௌலவி பட்டம் பெறவுள்ளதாகவும் ,அல்குர்ஆண் மனனம் செய்த 20 பேர் அல்-ஹாபிழ் பட்டம் பெறவுள்ளதாகவும் தெரிவித்தார்.

இப்பட்டமளிப்பு விழா நிகழ்வுகளில் உலமாக்கள்,புத்திஜீவிகள்,கல்வியலாளர்கள்,ஊர் பிரமுகர்கள்,கல்லூரி மாணவர்களின் பெற்றோர்கள் என பலரும் கலந்து சிறப்பிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.