இலங்கை-இந்தியா பெண்கள் முதலாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி வெற்றி
இந்தியா-இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிகள் இடையிலான 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நேற்று நடந்தது.
முதலில் ஆடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 245 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சமாக மன்தனா 55 ரன்னும், ஹர்மன்பிரீத் கவுர் 50 ரன்னும் எடுத்தனர். பின்னர் இலக்கை நோக்கி ஆடிய இலங்கை அணி, இந்திய வீராங்கனைகளின் சிறப்பான பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 45.2 ஓவர்களில் 138 ரன்னில் சுருண்டது. இதனால் இந்திய அணி 107 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகள் இடையிலான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ராஞ்சியில் நாளை (புதன்கிழமை) நடக்கவிருக்கிறது.



