Breaking News

விராட் ஹோலியின் 80 இனிங்ஸ் சாதனையை 50 இனிங்சில் முறியடித்த தென்னாபிரிக்க அணியின் இளம் வீரர் !!

சர்வதேச ஒருநாள் கிரிக்கட் வரலாற்றில் குறைந்த வயதில் 10 சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனையை தென்னாபிரிக்க அணியின் இளம் அதிரடி ஆட்டக்காரரான குடியிட்டன் டி கொக் படைத்துள்ளார்.

தென்னாபிரிக்காவிற்கு கிரிக்கட் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள விளையாடி வரும் இங்கிலாந்து அணிக்கும், தென்னாரிக்க அணிக்கும் இடையிலான மூன்றாவது ஒருநாள் சர்வதேச போட்டியின் போதே அவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.

இதன்மூலம் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரரான விராட் ஹோலியின் சாதனையை அவர் முறியடித்துள்ளார். அத்துடன், குறித்த சாதனையை விராட் ஹோலி 80 இன்னிங்கில் படைத்த நிலையில், குடியிட்டன் டி கொக் வெறும் 50 இன்னிங்சிலேயே இந்த சாதனையை தன்வசப்படுத்தியுள்ளார்.