நாடளாவியல் ரீதியல் 5000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொண்டு தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்கள்.
இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவியல் ரீதியல் இளைஞர்கள் சார்ந்த விடயங்களை வலுபடுத்தும் நோக்கில் தேசிய அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.
இதன் கீழ் இலங்கை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் நாடளாவியல் ரீதியல் உள்ள 365 பிரதேச செயலக பிரிவுகளில் சுமார் 5000 இளைஞர், யுவதிகளை இணைத்துக்கொண்டு "யோவுன் புர"எனும் வேலைத்திட்டத்தினை ஆரம்பிக்கவிருக்கின்றது.
இந்த திட்டத்தினை கிழக்கு மாகாணத்தில் நடைமுறை படுத்துவதற்காக மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை ஆகிய மூன்று மாவட்டங்களிலும் உள்ள தேசிய இளைஞர் சேவைகள், மாவட்ட தேசிய இளைஞர் சேவைகள், பிரதேச தேசிய இளைஞர் சேவைகள் ஆகிய சம்மேளன பணிப்பாளர்களுக்கும், தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும், மற்றும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உத்தியோகத்தர்களுக்கும் இச்செயல்திட்டம் தொடர்பான தெளிவூட்டும் நிகழ்வு இன்று கிழக்குமாகாண தேசிய இளைஞர் மன்ற கிழக்குமாகான பணிப்பாளர் சுகத் ஹெவா விதாரண தலைமையில் மட்டக்களப்பு தேவநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை தேசிய இளைஞர் சேவைகள் சம்மேளனம் பணிப்பாளர்கள், தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் உத்தியோகத்தர்கள் மற்றும் தேசிய இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
(லியோ)



