Breaking News

டி-20 உலக கோப்பை பொதுவான இடத்தில் ஆட பாகிஸ்தான் விருப்பம்

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டி மார்ச் 8–ந்தேதி இந்தியாவில் தொடங்குகிறது. இந்தப் போட்டியில் பொதுவான இடத்தில் விளையாட பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்துள்ளது. சமீபத்தில் நடந்த சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் (ஐ.சி.சி) இது தொடர்பாக வலியுறுத்தியது.

இதுபற்றி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய தலைவர் சகாரியர்கான் கூறியதாவது:–

20 ஓவர் உலக கோப்பை போட்டியில் இந்தியாவில் விளையாட பாகிஸ்தான் அரசு அனுமதி தராவிட்டால் பொதுவான இடத்தில் விளையாட விரும்புவதாக ஐ.சி.சி.யிடம் சமீபத்தில் தெரிவித்தோம். துபாய், சார்ஜா அல்லது கொழும்பில் விளையாட விரும்புவதாக தெரிவித்துள்ளோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

பாகிஸ்தானுடனான இருநாட்டு தொடரில் விளையாட இந்திய அணிக்கு மத்திய அரசு இதுவரை அனுமதி அளித்தது இல்லை. இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் புதிய முறையை கையாண்டு மிரட்ட திட்டமிட்டுள்ளது.

இதற்கிடையே 20 ஓவர் உலக கோப்பையில் விளையாட அனுமதிக்குமாறு பாகிஸ்தான் அரசிடம் அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் கேட்டுக்கொண்டுள்ளது