முக்கிய பிரமுகரை வரவேற்க தயாராகும் வெலிகடை சிறைச்சாலை !
வெலிகடை சிறைச்சாலையின் உள்ள விசேட சிறை அறைகள், சிறைச்சாலை அதிகாரிகளால் புனரமைக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது, முக்கிய பிரமுகர் ஒருவர் விரைவில் கைது செய்யபடலாம் என்ற யூகங்கள் எழுந்துள்ளன.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, மறைந்த பிரபல நடிகரும் அரசியல்வாதியுமான விஜய குமாரதுங்க, போன்ற முக்கியஸ்தர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த வெலிகடை சிறைச்சாலையிலுள்ள எஸ்.வாட்டு எனும் பிரிவே இவ்வாறு திடீரென புனர்நிர்மாணம் செய்யப்படுகின்றதாக தெரிவிக்கப்படுகிறது.
நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வர் யோஷித ராஜபக்ஷ தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அதுமட்டுமின்றி மஹிந்தவின் மனைவி, சகோதரர்கள் என அனைவரும் பல்வேறு குற்றச்சாட்டுகளின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். இவ்வாறான சூழ்நிலையில் இடம்பெற்றுவரும் இந்த புனரமைப்பு நடவடிக்கைகளானது மஹிந்தவின் ஏனைய குடும்ப உறுப்பினர்களையும் குறிவைத்திருப்பதாக பல்வேறு சந்தேகங்களை தோற்றுவித்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.



