ரூபா 1.7 மில்லியன் பெறுமதியான கேரள கஞ்சா கண்டுபிடிப்பு !
இரகசிய தகவலொன்றிற்கு அமைய ரூபா 1.7 மில்லியன் பெறுமதியான குறித்த கேரள கஞ்சா பொதிகளை சிலாபத்துறை பகுதியிலிருந்து மது வரித்திணைக்கள அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
இன்னடவடிக்கையின் பொது சிலாபத்துறையின் குறித்த காட்டு பகுதியிலிருந்து 17.64 கிலோ எடை கொண்ட 8 கேரள கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டதாக மன்னார் மதுவரி திணைக்களத்தின் பொறுப்பதிகாரி பிரதம பரிசோதகர் தெரிவித்தார்.



