Breaking News

கல்லடி கடற்கரையில் வழி தவறிய மூன்று சிறுவர்கள் கிராம சேவகரிடம் ஒப்படைப்பு !

மட்டக்களப்பு கல்லடி கடற்கரை பிரதேசத்தில் வழி தவறியமையால் அலைந்து திரிந்த 3 சிறுவர்களை பொதுமக்கள் திருச்செந்தூர் கிராம சேவை அதிகாரியிடம் ஒப்படைத்துள்ளனர்.

இச்சம்பவம் சம்பவம் இன்று (12.02) காலை இடம் பெற்றுள்ளது. இவர்கள் செங்கலடி பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கோப்பாவெளி கிராமத்தைச் சேர்ந்த கித்துள் கிருஸ்ணா வித்தியாலயத்தில் 9ம் தரத்தில் கல்வி பயிலும் பியதாச சஜீவன், அன்பழகன் நிதர்சன், முருகுப்பிள்ளை சாதுரியன்  ஆவர். 

மேலும் இவர்கள் கடந்த புதன்கிழமை மாலை தமது கிராமத்திலிருந்து கடற்கரையைப் பார்ப்தற்காக கல்லடி கடற்கரைக்கு பெற்றோரிரகு தெரியாமல் வந்துள்ளனர். கடலில் விளையாடி விட்டு வீடு திரும்புவதற்குரிய வழிமறந்ததால் நேற்றிரவு அங்கேயே தங்கியுள்ளனர். 

இவ்வாறு இடம் தெரியாமல் தவித்த சிறுவர்களை பொதுமக்கள் கிராம சேவை அதிகாரியிடம் கையளித்ததின் பின்னர் இச்சிறுவர்களை அவர்களின் பாடசாலை ஆசிரியர்களை வரவழைத்து அவர்களிடம் ஒப்படைத்ததாக கிராம சேவை அதிகாரி தெரிவித்தார்.