360 TB சேமிக்கும் சூப்பர்மேன் மெமரி கிறிஸ்டல்ஸ் குறுந்தகடு
பிரிட்டனின் பல்கலைக்கழகத்தை சேர்ந்த விஞ்ஞானிகள் ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும் அழியாத வகையில் குறுந்தகடு ஒன்றை உருவாக்கியுள்ளனர்.
நானோ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட கண்ணாடி இழைகளைக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்தக் குறுந்தகடு, சிறிய நாணயத்தின் அளவே உள்ளது. எனினும், இதில் 360 டெராபைட் (1 டெரா பைட் என்பது 100 ஜிகா பைட்) அளவிலான தகவல்களைப் சேமித்து வைக்கமுடியும்.
லேசர் கதிர் மூலம் அதிவேகத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, இந்த குறுந்தகட்டில் தகவல்கள் பதிவு செய்யவும், மீண்டும் பெறவும் முடியும். இதன் நவீன தொழில்நுட்பம் காரணமாக ஒவ்வொரு தகவல் புள்ளியும் 5 மைக்ரோமீட்டர்(ஒரு மீட்டரின் பத்து லட்சத்தில் ஒரு பகுதி) இடைவெளியில் அமைந்துள்ளாதால், மிகச் சிறிய இடத்திலேயே அதிக தகவல்களைப் பதிவு செய்ய முடிகிறது.
Superman Memory Crystal என்று பெயரிடப்பட்டுள்ள இந்த குறுந்தகடு 1,000 டிகிரி செல்ஷியஸ் வரையிலான வெப்பத்தை தாக்குப் பிடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 190 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில் கூட இந்தக் குறுந்தகடு 1,380 கோடி ஆண்டுகள் நிலைத்திருக்கும் என்றும் சாதாரண வெப்ப நிலையில் இந்தக் குறுந்தகடுகள் எல்லையற்ற வாழ்நாளைக் கொண்டிருக்கும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.