Breaking News

நிரந்திரமான அரசியல் தீர்விற்கானவளி பொலிஸ், காணி அதிகாரங்கள் வழங்கப்படுவதே : டிலான் பெரேரா

13 ஆவது திருத்தச் சட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்களை மாகாண சபைகளுக்கு வழங்குவதன் மூலமாகவே தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கு நியாயமான அரசியல் தீர்வைக்காண முடியும் என இராஜாங்க அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்தார்.

புதிய அரசியலமைப்பு திருத்ததினுடக  இதனை உறுதிப்படுத்த வேண்டியது அவசியமாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.  இவ்வாறு காணி மற்றும் பொலிஸ் அதிகாரங்களை வழங்கும் போது அதனை இனவாத சக்திகள் தடுக்க முற்படலாம். ஆனால் அவற்றை நாம் எதிர்கொண்டு பிரச்சினையை தீர்ப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பாடுகளை முன்னெடுக்கவேண்டியது மிக அவசியமாகும்.என்று தெரிவித்தார்.