Breaking News

பல்கலைக்கழக விசேட தேவையுடைய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கும் உதவி தொகை வழங்கும் நிகழ்வு


மட்டக்களப்பு Batti Unifund அமைப்பின் ஏற்பாட்டில் அவுஸ்திரேலிய தமிழ் பட்டதாரிகள் சங்கத்தின் நிதி அனுசரணையில் பல்கலைக்கழகத்தில் கல்வி பயிலும் மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய மாணவர்களின்  கல்வியை ஊக்குவிக்கும் உதவி தொகை வழங்கும் நிகழ்வு வைத்தியர் கே .பி . சுந்தரேசன் தலைமையில் மட்டக்களப்பு  றோட்டரிக் கழக மண்டபத்தில் நேற்று  இடம்பெற்றது .

இந்நிகழ்வில்  மட்டக்களப்பு கல்லடி உப்போடை இராமகிருஷ்ண மிஷன்  வணக்கத்துக்குரிய ஸ்ரீமத் சுவாமி பிரபு பிரேமானந்தாஜி மகராஜ் , அருட்தந்தை எக்ஸ் .ஐ . ரஜீவன் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட விசேட தேவையுடைய பாடசாலை அங்கத்தவர்கள் , Batti Unifund அமைப்பின் உறுப்பினர்கள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கலந்துகொண்டனர் .