யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவத் தவறியுள்ளது!
அண்மையில் இலங்கைக்கான நான்குநாள் உத்தியோகபூர்வ விஜயத்தின் பின்னர் கொழும்பில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் வதிவிட அலுவலகத்தில் நடத்திய ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ;
இலங்கைக்கான எனது பயணம் வெற்றியளித்துள்ளது.
யுத்தத்தின் பின்னரான சூழல் எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
இலங்கையில் ஊடக சுதந்திரம் மற்றும் தகவலறியும் உரிமை உறுதி செய்யப்பட்டுள்ளது
வடக்கு கிழக்கில் காணப்படும் காணிகளை விடுவிக்க இராணுவம் துரிதப்படுத்தப்பட வேண்டும்.
யுத்தத்தில் பாதிக்கப்பட்டு அங்கவீனர்களானவர்களுக்கு உதவ அரசாங்கம் தவறியுள்ளது.
நாட்டில் பாதுகாப்பை கருத்திற்கொண்டு சிறை பிடிக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை விடுவிக்க இலங்கை அரசாங்கம் துரித நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
ஐக்கிய நாடுகளின் இலங்கை தொடர்பான பிரேரணை நாட்டிற்கு எந்த வகையிலும் அச்சறுத்தலாக அமையாது.
நல்லிணக்கம் மற்றும் நிலையான அபிவிருத்தி தொடர்பில் அரசாங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்ற வேண்டும்.
வெள்ளை வேன் கலாசாரம் தற்போது குறைவடைந்துள்ளது.
இம்முறை சுதந்திர தினத்தின் போது தேசிய கீதம் தமிழ் மொழியில் பாடப்பட்டமையானது மிகுந்த சிறந்த விடயம்.
இலங்கையில் மனித உரிமையை உறுதிப்படுத்துவதற்கு அரசாங்கம் ஒத்துழைப்புக்களை வழக்க வேண்டும்.
போரின் போது இராணுவம் மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகள் ஆகிய இரு தரப்பினாலும் பொதுமக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியிருந்தமை தனது விஜயத்தின் போது கண்டறியப்பட்டுள்ளது.
வடக்கு கிழக்கு மாத்திரமன்றி, மலையகத்திலுள்ள தமிழ் மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்.
யுத்தத்தின் பின்னரான சூழல் தனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது.
அச்ச சூழ்நிலை தெற்கிலும் கொழும்பிலும் குறிப்பிடத்தக்களவிற்கு குறைவடைந்துள்ளது.
எனினும் வடக்கு மற்றும் கிழக்கில் அது உருமாறியுள்ளது. ஆனால் கவலையளிக்கும் விதத்தில் அது காணப்படுகின்றது.
அத்துடன் சித்திரவதைகள் குறித்த முறைப்பாடுகள் குறைவடைந்துள்ளன. கடந்த வருடம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் நிறைவேற்றப்பட்ட யோசனையை, நடைமுறைப்படுத்தும் முறை தொடர்பில் தமது அலுவலகம் அவதானித்து வருகின்றதாகவும் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் செயித் அல் ஹுசைன் மேலும் தெரிவித்தார்.



