Breaking News

70,80 ரூபா இளநீருக்கும் மட்டக்களப்பில் தட்டுப்பாடு-படங்கள்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-

70,80 ரூபாவுக்கு விற்கப்படும் இளநீருக்கும் மட்டக்களப்பில் தட்டுப்பாடு- தினமும் அதிகமாக வெள்ளரிப்பழம் விற்பனை-படங்கள்.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் தற்போது நிலவிவரும் அதிக வெப்ப மற்றும் உஷ்ன நிலைமை காரணமாக பொது மக்கள்,பாடசாலை மாணவர்கள்,அங்காடி வியாபாரிகள் ,மீனவர்கள் என பல தரப்பினர் பல்வேறு அசௌகரியங்களுக்கும் இன்னல்களுக்கும் ஆளாகி வருகின்றனர்.

இதே வேளை மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மக்கள் வெப்பத்தை தணிக்கும் இளநீர் மற்றும் வெள்ளரிப்பழம் என்பவற்றை அதிகமாக வாங்கி வருவதால் அதற்கு அதிக கிராக்கி ஏற்பட்டுள்ளது.

அத்தோடு மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் 50 ரூபாவுக்கு விற்பனை செய்யப்பட்ட இளநீர் ஒன்று தற்போது  70 ரூபாய் முதல் 80 ரூபா வரைக்கும் விற்பனை செய்யப்படுவதோடு நேற்று முதல் அந்த விலைக்கும் இளநீர் கிடைக்காமல் தட்டுப்பாடு நிலவி வருகின்றது.

வெப்பத்தை தணிக்கும் வெள்ளரிப்பழம் 50 ரூபா தொடக்கம் 250ரூபாய் வரையில் தினமும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மட்டக்களப்பு ஆரையம்பதி பிரதேசத்தில் வியாபாரத்தில் ஈடுபட்ட வெள்ளரிப்பழ வியாபாரி ஒருவர் தெரிவித்தார்.