Breaking News

உணவு காலாசாரத்தை மேம்படுத்தும் நோக்குடன் மாபெரும் பலகாரச சந்தை

 (என்டன்)


பாரம்பரிய உணவு காலாசாரத்தை  மேம்படுத்தும் நோக்குடன் மாபெரும் பலகாரச சந்தை மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில்  இன்று இடம்பெற்றது .


கலாசார மற்றும் கலை அலுவல்கள் நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் பாரம்பரிய உணவு காலாசாரத்தை  மேம்படுத்தும் நோக்குடன்  “ எமது பலகாரச் சந்தை “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் பலகாரச் சந்தை நிகழ்வு  மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக வளாகத்தில் பிரதேச செயலாளர் வி . தவராஜா   இன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது .

தமிழர்களின் பாரம்பரிய உணவு கலாசாரத்தினையும்  ,மக்களின்  சுகாதாரத்துடனான   போஷாக்கினையும்  மற்றும் பொருளாதாரத்தினையும்  வலுப்படுத்தும் நோக்குடன் சித்திரைப்  புத்தாண்டை அடிப்படையாகக் கொண்டு பாரம்பரிய உணவு உற்பத்தியினையும்  பாரம்பரிய  உணவு தொடர்பான  உணவுசார் செயல்பாடுகளை மீண்டும்  ஊக்குவித்தல் நிகழ்ச்சியினை அறிமுகப் படுத்தும் நிகழ்வாக  “எமது பலகாரச் சந்தை “ எனும் தொனிப்பொருளில் மாபெரும் பலகாரச் சந்தை நிகழ்வு இன்று இடம்பெற்றது .


இந்நிகழ்வில் மண்முனை வடக்கு  பிரதேச செயலக உதவி பிரதேச  செயலாளர் எஸ் .யோகராஜா . பிரதம  கணக்காளர் திருமதி ,ஆர் .ஜெகநாதன் , உதவி  திட்டமிடல் பணிப்பாளர்  ஆர் . யதீஸ்குமார் , வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி  திணைக்கள முகாமைத்துவ பணிப்பாளர் . திருமதி . கிரிதராஜ் நிர்மலா , வடக்கு வாழ்வின் எழுச்சி அபிவிருத்தி திணைக்கள முகாமையாளர்  திருமதி செல்வி வாமதேவன் , கிராம சேவை நிர்வாக உத்தியோகத்தர் எஸ் .தில்லைநாதன்  மற்றும் பிரதேச செயலக அலுவலக உத்தியோகத்தர்கள் , கிராம சேவை உத்தியோகத்தர்கள் ,சமுர்த்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர் .