“ என் ஜெபம் வீணாகாது “ இசை இறுவெட்டு வெளியீட்டு விழா நிகழ்வு
 “ என் ஜெபம் வீணாகாது “ கிறிஸ்தவ பாடல்கள் அடங்கிய  இசை
இறுவெட்டு வெளியீட்டு விழா  நிகழ்வு  17.04.2016  மாலை மட்டக்களப்பு இருதயபுரத்தில்
 இடம்பெற்றது .
மட்டக்களப்பு
வாகரை புனித இராயப்பர் ஆலய பங்கை சேர்ந்த ஜோசப் சிபில்ராஜ் வெளியிடும்  “ என் ஜெபம் வீணாகாது “ கிறிஸ்தவ
 பாடல்கள் அடங்கிய   இசை இறுவெட்டு வெளியீட்டு விழாவும் , கௌரவிப்பு  நிகழ்வு அருட்தந்தை எம் .ஸ்ரனில்லோஸ் தலைமையில் மட்டக்களப்பு இருதயபுரம் திரு இருதயநாதர் ஆலய முன்றலில்   17.04.2016   மாலை 05.30 மணியளவில் இடம்பெற்றது .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக மட்டக்களப்பு மறை மாவட்ட குரு முதல்வர்  எ .தேவதாசன் ,சிறப்பு
விருந்தினர்களாக யேசு சபை துறவி அருட்பணி போல் சற்குண நாயகம் , சிறிய குருமட அதிபர்  அருட்பணி
. மொறாயஸ் , மறை மாவட்ட ஆயர் இல்ல நிதிப் பொறுப்பாளர்
அருட்பணி இஞ்ஞாசி ஜோசப் மற்றும்
அருட்தந்தையர்கள் ,அருட்சகோதரிகள்
, பங்கு மக்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர் . 
மட்டக்களப்பு  வாகரை
பிரதேசத்தின் புனித இராயப்பர் ஆலய பங்கை சேர்ந்த ஜோசப் சிபில்ராஜ் கடந்த 2004ஆம் ஆண்டு  ஏற்பட்ட
சுனாமி இயற்கை அனர்த்தத்தினால் பல அழிவுகளையும் , இழப்புக்களையும் சந்தித்த இவர் மாண்டவர் மீண்டு
எழுந்தார்  என்பதற்கு அமைய இறைவனுக்கு நன்றி கூறும் வகையில் அருட்தந்தை ஜேசுதாசன்  அடிகளாரின்
உதவியுடன் கிறிஸ்தவ பாடல்களை  இயற்றி  “ என் ஜெபம் வீணாகாது “ எனும் இசை இறுவெட்டினை  வெளியிட்டுள்ளார் .  
வெளியிடப்பட்டுள்ள
 இறுவெட்டில் இவருடைய கருத்தாளம் மிக்க வரிகளுடன்
இசையினையும் ஒழுங்கமைத்து வெளியிடப்பட்ட முதலாவது
இறுவெட்டு விழாவில் இவருக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டமை
குறிப்பிடத்தக்கது .



