தன்னாமுனை மியானி நகர் ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த விளையாட்டு போட்டி நிகழ்வுகள்
(என்டன்)
தன்னாமுனை
மியானி நகர் ஹோலி இனொசன்ஸ் அக்கடமி
பாலர் பாடசாலை சிறார்களின் வருடாந்த
விளையாட்டு போட்டி நிகழ்வுகள் இன்று
இடம்பெற்றது .
மட்டக்களப்பு
ஏறாவூர் பற்று கல்வி கோட்டத்திற்குட்பட தன்னாமுனை மியானி நகர் ஹோலி இனொசன்ஸ் அக்கடமி பாலர் பாடசாலை
சிறார்களின் வருடாந்த விளையாட்டு போட்டி
நிகழ்வுகள் சொமஸ்கன் அருட்சகோதரிகளின்
அனுசரணையுடன் பாடசாலை
அதிபர் அருட்சகோதரி .இ .சுலக்ஷ்னா தலைமையில் பாடசாலை மைதானத்தில் இன்று
இடம்பெற்றது .
ஆரம்ப
நிகழ்வாக மங்கள விளக்கேற்ற பற்று இறை வணக்கத்துடன் ஆரம்பமானது .
இதனை
தொடர்ந்து சிறுவர்களின் வினோத
விளையாட்டுகளும் ,உடல்பயிற்சி கண்காட்சி
நிகழ்வுகளும் இடம்பெற்றது .
இடம்பெற்ற
விளையாட்டு நிகழ்வுகளில் பங்குபற்றிய
சிறார்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டது .
இந்நிகழ்வில் விசேட அதிதியாக மட்டக்களப்பு முன்பள்ளி கல்வி
அபிவிருத்தி உத்தியோகத்தர் செல்வி . சோபனா ,
கௌரவ அதிதிகளாக அருட்சகோதரி ஜிசின்டா,
அருட்சகோதரி மார்ஸ்சலா , சொமஸ்கன்
அருட்சகோதரிகளின் மேலானர் அருட்சகோதரி
மவ்ரா மோசா , பாடசாலை ஆசிரியர்கள் ,
சிறார்களின் பெற்றோர் மற்றும் இப்பகுதி முன்பள்ளி பாடசாலைகளின் சிறார்கள் , ஆசிரியர்கள்
ஆகியோர் கலந்து சிறப்பித்தனர் .