சிரஞ்சீவி படத்தில் நயன்னின், சம்பளம் ரூ.3 சி, பிகினிக்கு ரூ.1 சி
அரசியல் பக்கம் போனாலும் போனார் அவரது ரசிகர்கள் அவரை ரொம்பவே மிஸ் பண்ணுகிறார்கள். இந்நிலையில் தான் அவர் தனது ரசிகர்களின் வேண்டுகோளை ஏற்று மீண்டும் ஹீரோவாக நடிக்க முடிவு செய்துள்ளார். அவர் மீண்டும் ஹீரோவாகும் படம் அவருக்கு 150வது படம் ஆகும்.
சிரஞ்சீவியின் 150வது படத்தில் அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார் என்று செய்திகள் வெளியாகின. அது மட்டும் இல்லை படத்தில் நடிக்க ரூ.3 கோடி, பிகினி காட்சிக்கு ரூ.1 கோடி சம்பளம் பேசியுள்ளார் நயன் என்று கூறப்பட்டது.
அனால் சிரஞ்சீவியின் 150வது படத்தில் தான் ஹீரோயினாக நடிப்பதாக வெளியான செய்திகளில் உண்மை இல்லை என்று நயன்தாரா தற்போது தெரிவித்துள்ளார். சிருவுடன் நடிக்க நயன் மறுத்ததாக கூறப்பட்டதும் உண்மை இல்லையாம்
நான் சிரஞ்சீவியுடன் எந்த படத்திலும் நடிக்கவில்லை. அவரது படத்தில் நடிக்க கேட்டு என்னை யாரும் அணுகவில்லை. மக்கள் அவர்களாகவே அவர்களுக்கு தோன்றியது போன்று பேசுகிறார்கள் என்கிறார் நயன்தாரா.



