Breaking News

மட்டக்களப்பு தாளங்குடாவில் இடம்பெற்ற விதவைகளுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கல்

எம்.ஐ.அப்துல் நஸார்

விதவைகளுக்கான உலருணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்கி வைக்கும் நிகழ்வு கடந்த திங்கட்கிழமை (11) மாலை 4.30 மணிக்கு தாளங்குடா ஸ்ரீ பெரிய தம்பிரான் ஆலய வளாகத்தில் நடைபெற்றது. 

சமூக சேவையாளரும் சமாதான நீதவானுமாகிய வீ.கந்தையா தலைமையில் அவரது செந்த நிதியில் இருந்து உலருணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகள் வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. 

இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய, விலங்கு உற்பத்தி மற்றும் சுகாதாரம், நீர்ப்பாசனம் மற்றும் மீன்பிடி அமைச்சர் கிருஷ்ணப்பிள்ளை துரைராசசிங்கம் கலந்து கொண்டார்.

சித்திரை புத்தாண்டை முன்னிட்டு வறுமை நிலையில் வாழும் விதவைகளுக்கு உதவுதும் நோக்கிலும் அவர்களது சிரமங்களைக் குறைக்கும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த உதவி வழங்கும் நிகழ்வில் இலங்கை போக்குவரத்து சபையின் வாகரை சாலையின் பிரதி முகாமையாளர் நமச்சிவாயம், ஸ்ரீ பெரிய தம்பிரான் ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள் உட்பட பலர் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.