Breaking News

சூதாட்டத்தில் ஈடுபட்டால் 10 வருடம் சிறை!

இது தொடர்பாக கிரிக்கெட் வாரியத்தின் செயலாளரும், பாரதீய ஜனதா எம்.பி.யுமான அனுராக் தாகூர் கூறியதாவது:–

விளையாட்டை ரசிப்பவர்களுக்கு அதில் நேர்மையை கொண்டு வருவது நமது பொறுப்பாகும். மேட்ச்பிக்சிங் எனும் சூதாட்டத்தில் ஈடுபடுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க சரியான சட்டம் இல்லை. மேட்ச் பிக்சிங்கை கட்டுப்படுத்த சட்டம் கொண்டுவருவது அத்தியாவசியமானதாகும்.

எந்த ஒரு விளையாட்டு வீரரும் சூதாட்டத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்க பரிந்துரை செய்யப்படும். இதற்கான புதிய மசோதாவில் இந்த பரிந்துரை இருக்கும்.

தற்போது உள்ள இந்திய தண்டனை சட்டம் சரியானதாக இல்லை. இதனால் 10 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைக்கும். மசோதாவை நிறைவேற்ற வேண்டும். இந்த மசோதா மேல்சபையில் முதலில் வைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

2013–ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியின் போது ஸ்ரீசாந்த், அங்கீத் சவான், அஜீத் சண்டிலா ஆகிய 3 வீரர்கள் ஸ்பாட்பிக்சிங் சூதாட்டத்தில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.