2017இல் முதலாம் தரத்திற்கு 39 மாணவர்களுக்கே அனுமதி ! (விண்ணப்ப படிவம், அறிவுறுத்தல்கள் இணைக்கப்பட்டுள்ளது)
2017ஆம் ஆண்டுக்கான அரச பாடசாலைகளுக்கு முதலாம் தரத்துக்கு மாணவர்களைச் சேர்ப்பதற்கான விதிமுறைகள், மாதிரி விண்ணப்பங்களை, கல்வியமைச்சு நேற்று(30) திங்கட்கிழமையன்று வெளியிட்டுள்ளது. இதன்படி, முதலாம் தர வகுப்பொன்றுக்கு சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையானது 40இலிருந்து 39ஆகக் குறைக்கப்பட்டுள்ளது.
இவ்வறிவித்தலின்படி வகுப்பொன்றுக்காக பாடசாலையின் மூலம் 34 பிள்ளைகளும், யுத்த நடவடிக்கையில் ஈடுபட்ட முப்படையினரின், பொலிஸ் உறுப்பினர்களின் பிள்ளைகள் 05ம் மாக 39 மாணவர்கள் தெரிவு செய்யப்படுவர் என தெரிவிக்கபட்டுள்ளது.
























