Breaking News

வடக்கு-கிழக்கு உள்ளக இடம்பெயர்வுக்கு உட்பட்ட மக்களின் காணி பிரச்னையை வெள்ளிக்குள் முடிக்கவும்!

வடக்கிலும் கிழக்கிலும் இடம்பெயர்ந்துள்ள மக்களை மீளக்குடியேற்றுவற்கான காணிகளை இனம்காணும் நடவடிக்கைகளை எதிவரும் 03ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்குள் பூரணப்படுத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை இடம்பெற்ற வடக்கு - கிழக்கு மாகாணங்களில் உள்ளக இடம்பெயர்வுக்கு உட்பட்ட மக்களை மீளக்குடியேற்றும் செயற்பாடுகள் தொடர்பான விசேட கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி இவ்வறிவித்தலை விடுத்ததாக தெரிவிக்கபடுகின்றது.