Breaking News

தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமாறு பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை



ஞாயிற்றுக்கிழமை மற்றும் ஏனைய கிழமை நாட்களில் அதிகாலை வேளையிலும்  இரவு நேரங்களில் வகுப்புக்கள் நடத்தப்படும் தனியார் கல்வி நிலையங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கமாறு  மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது .

மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மைய காலமாக தனியார் கல்வி நிலையங்கள் அதிகரிக்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது அதிகாலை வேளையிலும் , இரவு நேரங்களிலும்  ஞாயிற்றுக்கிழமைகளிலும் நடத்தப்படுகின்ற தனியார் வகுப்புக்கள் மற்றும் இடம்பெறுகின்ற துஸ்பிரயோகங்கள் தொடர்பாக  பெற்றோர்களினால்  மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜாவின் கவணத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது .


குறித்த விடயம் தொடர்பில்  மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின் சம்பந்த பட்ட தனியார் கல்வி நிலையங்களுக்கு , சம்பந்த பட்ட நபர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மட்டக்களப்பு மாவட்ட மாவட்ட பொலிஸ் மா அதிபருக்கு மட்டக்களப்பு மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா உத்தரவு பிறப்பித்துள்ளார் . (லியோன்)