Breaking News

'ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுன்னு நிரூபிச்சிட்டாரே!

முதிய பெண்ணிடம் தகராறு செய்த இளைஞர் ஒருவரை சூர்யா ஓங்கி அறைந்ததாகவும், இதனால் அந்த இளைஞர் மயங்கி விழுந்ததாகவும் நேற்று முதல் பரபரத்துக் கிடக்கிறது கோடம்பாக்கம். இந்த விவகாரத்தில் சூர்யாவுக்கு ஆதரவாக ஏராளமானோர் சமூக வலைத் தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

'சூர்யா நிஜத்திலும் ஒரு ஹீரோவாகத்தான் நடந்து கொண்டிருக்கிறார். தவறு செய்துவிட்டு வீம்புக்கு மல்லுக்கட்டியவர்களை கொஞ்சவா முடியும். ரெண்டு விட்டாதான் புத்தி வரும்' என்று சிலர் தெரிவித்துள்ளனர். 'சிங்கம் படத்தில் ஓங்கி அடிச்சா ஒன்றரை டன் வெயிட்டுடா.. பாக்குறியா பாக்குறியா' என்று கர்ஜித்த சூர்யா, நிஜத்திலும் செய்து காட்டிவிட்டார்' என்று இந்த ரணகளத்திலும் குதூகலமாக மீம்ஸ் போட்டு வருகின்றனர்.

இன்னும் சிலர்! இன்னொரு பக்கம் புகார் கொடுத்துள்ள இளைஞருக்கு ஆதரவாகவும் சிலர் பேச ஆரம்பித்துள்ளனர். 'சினிமாவில் ஹீரோவாக சட்டத்தை சூர்யா கையிலெடுக்கலாம். ஆனால் நிஜத்தில் அதை போலீசாரிடம் விட்டிருக்க வேண்டும். என்னதான் இளைஞர்கள் மோசமாக நடந்திருந்தாலும் சூர்யா அடித்திருக்கக் கூடாது," என்கிறார்கள். இதற்கிடையில், விபத்துக் காரணமான அந்த கார் பெண்மணி இன்று போலீசாரிடம் சாட்சி கூற வருகிறார். அவர் சொன்ன பிறகுதான் சூர்யா அடித்தாரா இல்லையா என்பது ஊர்ஜிதமாகும்