Breaking News

'இது நம்ம ஆளு' திரைப்படம் வரவேற்பு மட்டுமல்ல... வசூலிலும் குறை வைக்கவில்லை

கடந்த வாரம் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம் தமிழ்நாடு முழுவதும் 14 கோடிகளை வசூல் செய்திருக்கிறது.

3 வருடப் போராட்டங்களுக்குப் பின் சிம்பு-நயன்தாரா நடிப்பில் வெளியான இது நம்ம ஆளு திரைப்படம், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

சிம்பு-நயன் கெமிஸ்ட்ரி, சூரி காமெடி ஆகியவை இப்படத்தில் நன்றாக இருப்பதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். இது தவிர வேறு பெரிய படங்கள் வெளியாகாதது, பாண்டிராஜின் இயக்கம், அதிக திரையரங்குகள் ஆகியவையும் இப்படத்திற்கு கைகொடுத்துள்ளன.