Breaking News

ஈமானை பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் இஸ்லாமிய பிரச்சார மாநாடு-படங்கள்

-பழுலுல்லாஹ் பர்ஹான்-
மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்தில் இயங்கிவரும் தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் ஏற்பாட்டில் 'ஈமானை பாதுகாப்போம்'; எனும் தொனிப் பொருளிலான இஸ்லாமிய பிரச்சார மாநாடு 27-05-2016 நேற்று வெள்ளிக்கிழமை மாலை தொடக்கம் இரவு வரை புதிய காத்தான்குடி நூறானியா மாவத்தை அலியார் சந்தியில் இடம்பெற்றது.

தாருல் அதர் அத்தஅவிய்யா தஃவா அமைப்பின் தலைவர் வை.பீ.ஏ.றவுப் தலைமையில் இடம்பெற்ற மேற்படி இஸ்லாமிய பிரச்சார மாநாட்டில் ஆண்,பெண் இஸ்லாமிய சகோதர சகோதரிகள் ,இளைஞர்கள், தாருல் அதர் அத்தஅவிய்யா அமைப்பின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன் போது 'கலிமாவை அறிவோம்' எனும் தலைப்பில் மௌலவி அப்துல் ஹமீத்(ஷரயியும்), 'ரமழானில் இருந்தவையும்,புகுந்தவையும்' எனும் தலைப்பில் மௌலவி ஜஹான் (பலாஹியும்), 'தௌஹீதுக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் பதில்களும்'; எனும் தலைப்பில் மௌலவி பீ.எம்.அஸ்பர் (பலாஹி) ஆகியோரினால்  சிறப்பான முறையில் சொற்பொழிவுகளை நிகழ்த்தினர்.

குறித்த மாநாட்டில் பொலிஸார் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.