ரசிகர்களை கலங்கடிக்க முயற்சிக்கும் அழகிய பேய் த்ரிஷா
த்ரிஷாவுக்கும், பேய்ப் படத்திற்கும் ஒர்க் அவுட்டான தைரியத்தில் நாயகி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷாவின் முன்னாள் மேனேஜரான கிரிதர் தயாரிப்பில் கோவி இயக்கத்தில் த்ரிஷா நடித்து வரும் பேய் படம் தான் நாயகி. வழக்கமாக அழகுப் பதுமையாக வரும் த்ரிஷா இதில் ரசிகர்களை கலங்கடிக்கும் பேயாக வருகிறார். த்ரிஷா என்ன இப்படி பேயாக கிளம்பிட்டாங்களே என நீங்கள் நினைக்கலாம். அதற்கு காரணம் உள்ளது.
கோலிவுட்டில் அண்மை காலமாக பேய் படங்கள் தான் கல்லா கட்டி வருகின்றன. அது மட்டும் அல்ல பேய் என்றால் பெண் பேயாக உள்ளது என்பதால் ஹீரோயினுக்கு தான் படத்தில் அதிக முக்கியத்துவம். அதனால் பேயாக நடிக்க ஹீரோயின்கள் போட்டா போட்டி போடுகிறார்கள்.