Breaking News

40 கோடியில் தயாரான சிவநாகம்

பாம்பு, பல்லி, பேய் என்று எதை வைத்து படம் எடுத்தாலும் கேள்வி கேட்காமல் வெளியிடுகிறவர்கள், ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். அவர்களை வாழ வைத்துக் கொண்டிருப்பதே இந்தவகை படங்கள்தான்.

தெலுங்கின் முன்னணி இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா 137 படங்கள் இயக்கியிருக்கிறார். 138 -வது படமாக அவர் இயக்கியிருப்பது கிராபிக்ஸுக்கு முக்கியத்துவம் உள்ள படம். குறிப்பாக ஒரு பிரமாண்ட பாம்பை கிராபிக்ஸில் உருவாக்கியிருக்கிறார்கள். இந்தப் படத்தை சிவநாகம் என்ற பெயரில் தமிழில் வெளியிடுகிறது, ஸ்ரீதேனாண்டாள் ஃபிலிம்ஸ். 

இதன் பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்து கொண்ட கோடி ராமகிருஷ்ணா, சின்ன பட்ஜெட்டில்தான் இந்தப் படத்தை தொடங்கினோம். கிளைமாக்ஸில் மறைந்த கன்னட நடிகர் விஷ்ணுவர்தன் வருவது போல் படமாக்கினோம். பிரமாண்டமாக படம் வந்திருக்கிறது. 40 கோடி செலவாயிற்று என்றார். 

கோடி ராமகிருஷ்ணனின் அம்மன், அருந்ததி போன்று இந்த சிவநாகமும் ஹிட்டடித்தால் ஆச்சரியமில்லை