Breaking News

அர்ஜென்டினா - அமெரிக்க அணிகள் நாளை பலப்பரீட்சை

கோபா அமெரிக்க கோப்பை கால்பந்து போட்டி அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. இதன் முதல் அரை இறுதி ஆட்டம் நாளை நடக்கிறது. இந்திய நேரடிப்படி காலை 6.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆட்டம் அர்ஜென்டினா - அமெரிக்கா அணிகள் மோதுகின்றன.

அர்ஜென்டினா ‘லீக்‘ ஆட்டங்களில் சிலி (2-1), பனாமா (5-0), பொலிவியா (3-0) என்ற கணக்கில் வென்று இருந்தது. கால் இறுதியில் 4-1 என்ற கணக்கில் வெனிசுலாவை வீழ்த்தியது. தோல்வியை சந்திக்காத அர்ஜென்டினா மிகுந்த நம்பிக்கையுடன் காணப்படுகிறது.

அமெரிக்கா லீக் ஆட்டத்தில் கோஸ்டாரிசா (4-0) பராகுவே (1-0) என்ற கணக்கில் அணிகளை வென்று இருந்தது. கொலம்பியாவிடம் (0-2) தோற்றது. கால் இறுதியில் 2-1 என்ற கணக்கில் ஈக்வடானை வீழ்த்தியது.