Breaking News

வாக்காளர் இடாப்பில் திருத்தங்களை மேற்கொள்ளும் பணிகள் ஆரம்பம் இம்மாதம் 21ம் திகதி வரைக்கும் வாக்களர் விபரத்திரட்டு கிடைக்காத்தவர்கள் முறையிடலாம்

வாக்காளர் இடாப்பில் திருத்தங்களைச்செய்யும் பணிகள் தொடங்கி உள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. வாக்காளர் விபரத் திரட்டுக்கான விண்ணப்பங்கள் குடியிருப்பாளர்களுக்கு விநியோகிக்கப்பட்டு வருவதாகவும் சில கிராமசேவகர் பிரிவுகளில் பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பங்கள் கிராம சேவகர்களினால் பொறுப்பேற்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்கு.  இம்மாதம் 21 ஆம் திகதிக்குள் வாக்காளர் விபரத் திரட்டு விண்ணப்பங்கள் கிடைக்காத சந்தர்பத்தில் அதுதொடர்பில் குடியிருப்பாளர்கள் வினவ முடியும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.