Breaking News

இப்படியும் மணமுடிக்கலாம் !

ஒருவரது வாழ்க்கையில் திருமணம் ஒரு பெரிய மாற்றமாகவும், மறக்க முடியாத தருணமாகவும் இருக்கும். பலர் அதற்காக திருமணத்தை மிகவும் சிறப்பாக நடத்துவார்கள். ஆனால் உலகில் சில தம்பதிகள் தங்கள் திருமணத்தை இதுவரை யாரும் எதிர்பாராத வகையில் நடத்தினர்.

இக்கட்டுரையில் நாம் இப்போது அந்த திருமணங்களைக் குறித்து தான் பார்க்கப் போகிறோம். இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஒவ்வொரு திருமணமும் மிகவும் வித்தியாசமாக இருக்கும். சரி, இப்போது அந்த திருமணங்களைப் பற்றி காண்போமா!!!

99,999 ரோஜாப்பூக்கள்
சீனாவில் ஒருவர் தனது திருமணத்திற்கு தன் ஒரு வருட சம்பளத்தைக் கொண்டு 99,999 ரோஜாப்பூக்களை வாங்கி அலங்காரம் செய்துள்ளார். சீனாவில் 999 என்பது மிகவும் அதிர்ஷ்ட எண்ணாக கருதப்பட்டு வருகிறது.

ஈர்ப்பு விசை இல்லாத பகுதியில் நடந்த திருமணம்
நியூயார்க்கைச் சேர்ந்த எரின் மற்றும் நோவா, புவி ஈர்ப்பு விசை இல்லாத போயிங் 727-200 விமானத்தில் தங்களது சபதத்தைப் பரிமாறிக் கொண்டனர். உண்மையிலேயே இது ஓர் வித்தியாசமான திருமணம் என்று சொல்லலாம்.

சைக்கிளில் திருமணம்
சைக்கிள் பிரியர்களான இந்த தம்பதியர்கள், மிகவும் வித்தியாசமாக உறவினர்களுடன் சைக்கிளில் நகரத்தை வலம் வந்தவாறு திருமணம் செய்து கொண்டனர்.

சுறா தொட்டியில் திருமணம்
இந்த நியூயார்க்கைச் சேர்ந்த தம்பதிகள் 120,000 கேலன் சுறா தொட்டி ஒன்றினுள் இருந்தவாறு திருமணம் செய்து கொண்டனர். இந்த திருமணத்தின் போது மணமகள் வெள்ளை நிற சூட்டையும், மணமகன் கருப்பு நிற சூட்டையும் அணிந்திருந்தனர். இருவருக்குமே கடலினுள் பயணிப்பது பிடிக்கும் என்பதால், இம்மாதிரி தங்களது திருமணத்தை வித்தியாசமாக செய்து கொண்டனர்.

வித்தியாசமான திருமணம்
சீனாவைச் சேர்ந்த இந்த மணப்பெண் உலக சாதனைப் படைத்தார். அது என்னவெனில் அந்த மணப்பெண் 100 கிலோகிராம் எடையுடன், 600 அடி நீளம் கொண்ட தன் உடைக்குப் பின்புறம் தொங்கவிடப்படும் வெள்ளை நிற துப்பட்டாவை அணிந்து வந்தார்.

பிறந்தமேனியில் திருமணம்
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பில் என்டகோட் மற்றும் எல்லி பார்டன் என்னும் தம்பதியினர் தங்கள் திருமணத்தை மிகவும் விசித்திரமாக செய்து கொண்டனர். அது என்னயெனில், 250 உறவினர்களின் முன்னிலையில், சற்றும் கூச்சமின்றி பிறந்தமேனியில் திருமணம் செய்து கொண்டனர்.

பங்கி ஜம்பிங் திருமணம்
இந்த தம்பதியினர் 10 உறவினர்கள் மட்டும் அருகில் இருக்குமாறான பாராசூட் ஒன்றில் 160 அடி உயரத்தில் திருமணம் செய்து கொண்டு, அங்கிருந்து பங்கி ஜம்பிங் செய்தனர்.