மகனை பார்வையிட வெலிக்கடை சிறைக்கு வந்தார் மஹிந்த
நேற்ரயதினம்(11) கைதான நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான நாமல் ராஜபக்ஷவை பார்வை இடுவதற்கென குருநாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ வெலிக்கடை சிறைச்சாலைக்கு நேற்றிரவு வருகை தந்திருந்தார்.
70 மில்லியன் ரூபா பணத்தை தவறாகப் பயன்படுத்தியமை மற்றும் பணச் சலவையில் ஈடுபட்டமை போன்ற குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை நடாத்திவரும் வரும் பொலிஸ் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட இவரை எதிர்வரும் 18ம் திகதிவரை விளக்க மறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



