Breaking News

டொனால்ட் டிரம்ப் மனைவி மெலினாவின் நிர்வாண புகைப்படங்கள் .... தி நியூயார்க் போஸ்ட்’ இன்று...

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டொனால்ட் டிரம்ப்பின் மனைவியான மெலினா டிரம்ப் பத்திரிகைகளின் அட்டைப் படங்களுக்கு நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்து விமர்சனங்களை தேடிக்கொள்வதிலும் நிகரில்லாதவராக விளங்கி வரும் குடியரசு கட்சியின் அதிபர் பதவி வேட்பாளர் டொனால்ட் டிரம்புக்கு ஆதரவாக அவரது மனைவி மெலினியா டிரம்ப் தற்போது பிரசார களத்தில் குதித்துள்ளார்.

யுகோஸ்லோவேக்கியா நாட்டில் 1970-ம் ஆண்டு நடுத்தர குடும்பத்தில் பிறந்த மெலினியா(46) மெல்ல மாடலிங் துறைக்குள் நுழைந்து உள்நாட்டில் பிரபலமானார். 

பின்னர், மிலன் மற்றும் பாரிஸ் நகரங்களில் மாடல் அழகியாக வலம்வந்த இவர் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் 1996-ம் ஆண்டு குடியேறினார். 1988-ம் ஆண்டு மன்ஹாட்டன் நகரில் நடந்த ஒருபார்ட்டியில் டொனால்ட் டிரம்ப்-ஐ சந்தித்த மெலினியா, அவரை காதலித்து, மூன்றாவது மனைவியானார்.

தனது முரட்டுத்தனமான கருத்துகளின்மூலம் ஒருதரப்பினரின் பகையை சம்பாதித்துவரும் கணவருக்கு சாதகமாக அவரது குணாதிசயங்களை புகழந்து பேசிவரும் மெலினியா அதிபர் தேர்தலில் டிரம்ப்புக்கு ஆதரவு திரட்டி வருகிறார்.

இந்நிலையில், அவர் மாடலிங் தொழிலில் கொடிகட்டி பறந்தபோது 1990-ம் ஆண்டுவாக்கில் நிர்வாணமாக ‘போஸ்’ கொடுத்த புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளன. முழு நிர்வாண கோலத்தில் அவரது பல்வேறு புகைப்படங்களையும், இன்னொரு பெண்ணுடன் கட்டியணைத்தபடி கட்டிலில் படுத்திருக்கும் வேறு சில புகைப்படங்களையும் அமெரிக்காவின் பிரபல நாளிதழான ‘தி நியூயார்க் போஸ்ட்’ இன்று வெளியிட்டுள்ளது.

தற்போது வெளியீடு நின்றுபோன பழைய பத்திரிகைக்காக அவர் முன்னர் போஸ் கொடுத்த இந்தப் புகைப்படங்கள் தனக்கு மெலினியா அறிமுகம் ஆவதற்கு முன்னர் எடுக்கப்பட்டவை என்று டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார்.

முன்னர் வெகு வெற்றிகரமான மாடலாக திகழ்ந்த மெலினியா, இதுபோல் ஏராளமான பத்திரிகைகளின் அட்டைப்படங்களுக்கு ‘போஸ்’ கொடுத்திருந்தது எனக்கு முன்னரே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.