Breaking News

சமூகவலைதளங்களின் அரசனாகும் 12 வயது சிறுவன்!

அவுஸ்திரேலியாவை சேர்ந்த 12 வயது சிறுவன் ஒருவன் சமூகவலைதளத்தில் தன்னை ஒவ்வொரு 3 வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாக கூறியுள்ளது சமூகவலைதளங்களில் தீயாக பரவியுள்ளது.

அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் பள்ளியில் படித்து வரும் சிறுவன் William Franklyn Miller(12) . இவருடைய புகைபடத்தை ஜப்பானை சேர்ந்த பள்ளி மாணவி ஒருவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

அந்த புகைபடத்திற்கு பகிர்வுகள் வெள்ளம் போல அவரது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டிராகிராம் பக்கத்தில் குவிந்தன.

மேலும் அச்சிறுவனை இன்ஸ்டிராகிராமில் ஒவ்வொரு மூன்று வினாடிக்கும் 100 பேர் பின்தொடர்வதாகவும், தற்போது வரை 152,000 பேர் பின்பற்றிவருவதாகவும் கூறப்படுகிறது.

இது குறித்து சிறுவனின் தாயார் Will's கூறியதாவது, சில பேர் போலியாக பின்பற்றுவதாகவும், மேலும் சிலர் இதை டேக் செய்து வருவதால், எந்த ஒரு கேள்வி என்றாலும் தனக்கு ட்விட் செய்யும் படியும், உண்மையில் என்ன நடக்கிறது என்பதை தான் கூறுகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் கடந்த இரண்டு தினங்களில் சீனா மற்றும் ஜப்பானில் மிகவும் பிரபலமாகிவிட்டதாகவும் கூறினார்.

Franklyn Miller பல்வேறு தொலைக்காட்சி தொகுப்புகள் நடத்த வாய்ப்பு வருகிறதாம்.

தற்போது கூட இன்ஸ்டாபேமஸ், தொலைக்காட்சி தொகுப்பாளர், ஸ்கைப் கேள்விகள் என பல்வேறு விதமான நிகழ்ச்சிகள் தொகுத்து வழங்குவதால், இதற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

இதனால் ரசிகர்கள் தங்கள் நாட்டிற்கும் வந்து இது போன்ற நிகழ்ச்சிகள் தொகுத்து நடத்துமாறு கூறுவதாக தெரிவிக்கின்றனர்.

ஆனால் Franklyn Miller ரோ படிப்பில் கவனம் செலுத்தி வருவதாகவும், அமெரிக்க திரைப்படங்கள் சிலவற்றில் நடித்துவருவதாக கூறப்படுகிறது.