Breaking News

“என்னை சிரிக்கவைத்துக் கொண்டே இருப்பவரையே திருமணம் செய்யப்போகிறேன்”

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் அகிரா படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார் பிரபல பாலிவுட் நடிகை சோனாக்ஷி சின்ஹா.

இதனிடையே அவர் அளித்த பேட்டியை மையமாக கொண்டு அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

பிரபல இதழ் ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், அவருக்கு எப்படிப்பட்ட கணவர் கிடைக்க வேண்டும் என்பது குறித்து விவரித்துள்ளார்.

அதில், தான் எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் வகையில் நகைச்சுவை உணர்வு கொண்ட கணவர் வேண்டும் என தெரிவித்துள்ளார்.

இதனால் சில காமெடி நடிகர்களின் புகைப்படத்தை அனுப்பி இவர் ஓ.கே.வா என அவரை நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.