Breaking News

முதல் முறையாக வங்கதேசில் விளையாடும் ஆப்கானிஸ்தான் !!

ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இலங்கை, இந்தியா, ஆஸ்திரேலியா, தென்ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, பாகிஸ்தான், நியூசிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் அணிகள் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.

வங்க தேசம் அவ்வப்போது முன்னணி அணிகளுக்கு அதிர்ச்சி அளித்து வருகிறது. கத்து குட்டி அணியான ஆப்கானிஸ்தான் இந்தியாவில் நடைபெற்ற டி20 உலககோப்பை தொடரில் வெஸ்ட் இண்டீஸ் அணியை வீழ்த்தி அதிர்ச்சி அளித்தது.

அந்த அணி ஜிம்பாப்வே போன்ற அணிகளுடன் ஒரு நாள் தொடரில் விளையாடி உள்ளது. ஆனால் முன்னணி அணிகளுடன் ஒருநாள் தொடரில் விளையாடியதில்லை. தற்போது முதல்முறையாக வங்க தேசம் சென்று அந்த நாட்டுக்கு எதிராக ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது.

3 போட்டிகள் கொண்ட இந்த தொடரின் முதல் போட்டி செப்டம்பர் 25ம் தேதி நடக்கிறது. அதன்பின் 28ம் தேதி 2வது போட்டியும், அ’டோபர் 1ம் தேதி 3வது போட்டியும் நடக்க இருக்கிறது.