Breaking News

நவீன தொழிநுடட்பமின்றி மிதக்கும் தீவை உருவாக்கி 24 ஆண்டுகள் வாழும் தம்பதி (வீடியோ)

கனடா நாட்டின் கேத்ரின் கிங் – வெயின் ஆதம்ஸ் தம்பதிகள் வீடு வாங்க போதுமான பண வசதியின்றி தவித்து வந்துள்ளனர்.

இந்நிலையில், ஊரைவிட்டு சுமார் 45 நிமிடம் காரில் பயணிக்கும் தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் ஒரு தனித் தீவை உருவாக்கி வாழ்ந்து வருகின்றனர்.

நவீன கருவிகள் ஏதுமின்றி ரம்பம் மற்றும் சுத்தியை வைத்தே இந்தத் தீவை உருவாக்கியுள்ளனர்.




முற்றிலும் மிதக்கும்  தீவாக அமைத்துள்ள இதில், நான்கு பசுமை குடியிருப்புகள், சமையலறை, பட்டறை, கலைக்கூடம் மற்றும் கலங்கரை விளக்கத்தை உருவாகியுள்ளனர்.

இது 500 டன் (ஒரு மில்லியன் பவுண்டுகள்) எடையுள்ளதாகவும் அமைந்துள்ளது இந்த பாராட்டுக்குரிய தீவு வீடு.