21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் கல்லூரிக்கு மாணவர்கள் துப்பாக்கி எடுத்துவரலாம் !
டெக்காஸ் மாகாணத்தில் 21 வயது நிரம்பிய மாணவ, மாணவிகள் கல்லூரி மற்றும் பல்கலைக்கழக வகுப்புகளுக்கு துப்பாக்கி கொண்டு செல்லலாம், என புதிய சட்டம் இயற்றப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் துப்பாக்கி கலாசாரம் மலிந்து விட்டது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் புகுந்து பலரை சுட்டு வீழ்த்தும் கொடுமை நடந்து வருகிறது. எனவே துப்பாக்கி வைத்துக்கொள்ள கட்டுப்பாடு விதிக்க வேண்டும் என்று சிலர் குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்காஸ் மாகாணத்தில் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் படிக்கும் மாணவர்கள் வகுப்பறைகளுக்கு துப்பாக்கி எடுத்து வர அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இதற்கு துப்பாக்கி ஆதரவாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் துப்பாக்கி சூடு நடத்த கல்லூரிகளுக்குள் நுழையும் நபரை எளிதாக சமாளிக்க முடியும் என்று கருத்து தெரிவித்துள்ளனர்.
கடந்த 1-ந் தேதி முதல் கல்லூரி வகுப்பறைகளுக்கு துப்பாக்கி எடுத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமெரிக்க கல்லூரிகளில் துப்பாக்கி வைத்துக்கொள்ள அனுமதி அளித்துள்ள பட்டியலில் டெக்காஸ் 7-வது மாகாணமாக திகழ்கிறது.



