Breaking News

அவுஸ்திரேலியா அருகே பாரிய நிலநடுக்கம், சுனாமி எச்சரிக்கை

அவுஸ்திரேலியா அருகே பசிபிக் பெருங்கடலில் உள்ள ஒரு தீவு நாடு வனுவாட்டுவில்  இன்று  கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பூமி குலுங்கியதால் வீடுகளில் இருந்த மக்கள் வெளியேறி தெருக்களில் ஓட்டம் பிடித்தனர்.

தொடக்கத்தில் 7.6 ரிக்டரில் நிலநடுக்கம் பதிவானதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 7.2 ரிக்டர் என கணக்கிடப்பட்டது. கடலுக்கு அடியில் 10 கி.மீட்டர் ஆழத்தில் இது உருவாகி இருந்தது.

இதனால் கடலில் வழக்கத்தை விட மிக உயரமான ராட்சத அலைகள் எழுந்தன, அதை தொடர்ந்து வனுவாட்டு, நியூகளிமோனியா, பிஜு ஆகிய நாடுகளுக்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது.

பிஜு தலைநகர் சுவா நகருக்கு விடப்பட்டிருந்த சுனாமி எச்சரிக்கை சிறிது நேரத்தில் ரத்து செய்யப்பட்டது. நிலநடுக்கத்தால் வனுவாட்டு நாட்டில் ஏற்பட்ட பாதிப்பு மற்றும் சேத விவரங்கள் வெளியிடப்பட வில்லை.