அவுஸ்திரேலியாவை திக்கு முக்காடவைத்த இலங்கை வீரர்கள்
இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகள் மோதும் 3வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் முதலில் பேட் செய்த இலங்கை அணி 26 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகளை இழந்து தவித்து வந்தது. 6வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த இளம்வீரர் தனஞ்செய் டிசில்வாவும், சண்டிமாலும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இவர்களை பிரிக்க அவுஸ்திரேலிய வீரர்கள் மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.
டிசில்வா சதமும், சண்டிமால் அரைசதமும் அடித்தனர். இவர்களின் பொறுப்பான ஆட்டத்தால் இலங்கை ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 214 ரன்கள் எடுத்திருந்தது. 17 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய அவுஸ்திரேலியாவால் அடுத்த 73 ஓவர்களில் ஒரு விக்கெட்டை கூட கைப்பற்ற முடியவில்லை.



