கோடிப்பேர் முன்னிலையில் காதலை சொல்லி – ஒலிம்பிக்கில் வீராங்கனையை ஆனந்த கண்ணீரில் மூழ்கடித்த வீரர்!!
சீன வீராங்கனை ஹி ஷி 3 மீட்டர் ஊஞ்சல் டைவிங் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
அவருக்கு பதக்கம் வழங்கும் நிகழ்ச்சியை கோடிக்கணக்கானோர் நேடியாகவும், தொலைக்காட்சி வாயிலாகவும் பார்த்துக் கொண்டிருக்கும் போது, மேடையில் ஏறினார் ஒரு இளைஞர்.
அவரும் டைவிங் வீரர் தான். திடீரென வீராங்கனை ஹி ஷி முன்பு மண்டியிட்ட அந்த வீரர் கின் கை, தனது பாக்கெட்டில் இருந்து சிறிய பாக்ஸை எடுத்தார்.
அதில் இருந்து மோதிரத்தை எடுத்து, வீராங்கனையிடம் லவ் பிரபோஸ் செய்தார். அதனை கண்ணீருடன் ஹி ஷி ஏற்றுக் கொள்ள மோதிரத்தை பரிசாக அளித்தார்.
பிறகு இருவரும் கண்ணீருடன் கட்டித் தழுவிக் கொண்டனர். இருவரும் கடந்த 6 ஆண்டுகளாகவே காதலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது



