நுரையீரல் பாதிப்புடன் குறைமாதத்தில் பிறந்த பெண் ஒலிம்பிக்கில் உலக சாதனை !
24 வருடங்களுக்கு அந்த பெண் குழந்தை பிறந்தபோது, கிட்டதிட்ட பிழைக்க மாட்டார் என்றே எல்லோரும் நினைத்தனர்.
நுரையீரல் குறைபாட்டுடன், 6 வாரங்களுக்கு முன்பாகவே ஆரோக்கியமின்றி பிறந்த அந்த குழந்தை, கிட்டதிட்ட 45 நாட்கள் அவசர சிகிச்சை பிரிவில் வைக்கப்பட்டது.
பின்னர் உடல்நலம் தேறி பெற்றோர் வீட்டிற்கு தூக்கிச் சென்றனர். அவ்வளவு உடல் பலவீனமான குழந்தை இன்று ஒலிம்பிக் போட்டியின் குழு சைக்கிள் பிரிவில் தங்கம் வென்று பிரிட்டனுக்கு பெருமை சேர்த்துள்ளது.
அந்த குழந்தை தான் லாரா டிராட்ஸ். குழந்தை பருவத்தில் இருதயத்தில் தொற்று பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்ட அவர், 6 வயதில் ஆஸ்துமாவிற்கு டையாகனிஸ் செய்து வந்தார்.
இந்நிலையில் டிராட்ஸின் தாயார் பாதிக்கப்பட்ட ரியோ ஒலிம்பிக் குழு சைக்கிள் பந்தய பிரிவில் தங்கம் வென்ற அவர், கடந்த 2012 ஒலிம்பிக்கில் 2 தங்கம் வென்றார்.
அவருடைய தாயார் கிலேண்டா தான் இந்த சாதனை தங்க மங்கையின் வெற்றிக்கு பின்னால் இருப்பவர்.
தனது உடல் எடையை குறைப்பதற்காக சைக்கிளிங் செய்த கிலேண்டா, குடும்பத்தினர் அனைவரையும் வற்புறுத்தி அழைத்துச் சென்றுள்ளார்.
அப்படி விளையாட்டாக சைக்கிள் ஓட்டச் சென்ற லாரா டிரெட்ஸ் தான்
இப்போது உலக சாதனை படைத்துள்ளார்.
2012 ஆம் ஆண்டு ஒலிம்பிக் வரை அவருக்கு விளையாட்டின் மூலம் மாதம் 100 பவுண்ட் ஸ்டெர்லிங் மட்டுமே வருவாய் கிடைத்துவந்தது.ஆனால் 2012 ஒலிம்பிக்கில் குழு மற்றும் தனிநபர் சைக்கிள் போட்டியில் 2 தங்கம் வென்று அசத்தினார். தற்போது ரியோ ஒலிம்பிலும் குழு சைக்கிள் போட்டியில் ஒரு தங்கம் வென்றுள்ளார்.




