ரூ. 35 மில்லியன் பெறுமதியான வெளிநாட்டு பணம் கைப்பற்று !
சட்டவிரோதமாக இலங்கையிலிருந்து சிங்கபூருக்கு கடத்தப்படவிருந்த 35 மில்லியன் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு பணம் கைப்பற்றப்பட்டுள்ளது. கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து இன்று{4) அதிகாலை சுங்க அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாகவும் குறித்த பணமானது , பயணப்பொதியினுள் அலங்கார பொருட்களுக்குள் சூட்சுமமாக மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது,



