விஜய், அஜித் டாப் ஹிட் கொடுத்த இயக்குனருக்கு இப்படி ஒரு சோதனையா?
தமிழ் சினிமாவில் விஜய், அஜித் இருவரையும் வைத்து ஒரு ஹிட் கொடுத்தால் போதும் உச்சத்திற்கு சென்றுவிடலாம். ஆனால், இவர்கள் இருவரையும் வைத்து தொடர் ஹிட் கொடுத்த பேரரசு தற்போது எந்த படமும் இல்லாமல் இருக்கிறார்.
ஆம், திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி என தொடர் வெற்றிகளை கொடுத்தவர் அடுத்தடுத்து விஜயகாந்த், அர்ஜுன் என முன்னணி நடிகர்களை தான் இயக்கினார்.
தற்போது நிலைமை வேறு, இதன் பிறகு இவர் எடுத்த எந்த படமும் வெற்றி பெறவில்லை, தற்போது புதுமுகங்களை வைத்து ஒரு படத்தை இயக்கலாம் என முடிவு செய்துவிட்டாராம், பார்ப்போது இதாவது இவருக்கு திருப்பம் தருமா என!.