பேஸ்புக் நிறுவனர் மார்க்ஜூக்கர் ப்ரைவேஸிக்காக வெப் கேமில் செய்துள்ள புத்திசாலிதனத்தை பாருங்கள்..
கணிணியில் ஒவ்வொருவரும் தன்னுடைய ப்ரைவேஸியை பாதுகாப்பதில் அதிகம் கவனம் செலுத்துவார்கள். ஆனால் சிலர் ஓட்டைகள் வழியாக அடுத்தவரின் கணிணியில் புகுந்து அந்தரங்கமாக வைத்திருக்கும் விஷயங்களை எடுத்துவிடுவார்கள். மேலும் அவர்களின் வங்கி கணக்கு, இமெயில் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை அபேஸ் செய்துவிடுவார்கள். அவர்களை சமாளிப்பது என்பது இந்த நவீன காலத்தில் எல்லோருக்குமே சவாலான ஒன்றாகத்தான் உள்ளது.
நாடுகள் மற்றும் பிரபல மனிதர்கள் என்று ஒன்றையும் ஹேக்கர்கள் விட்டுவைப்பதில்லை.ஏதாவது சில்மிஷங்களை செய்துவிடுகிறார்கள். இதனால் தங்கள் பிரைவேஸியை பாதுகாக்க அனைவருமே கடும் முயற்சி எடுக்கின்றனர். அந்த வகையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜுக்கர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்தால் அது எந்த அளவிற்கு, உண்மை என்பது புரியும்.
சமீபத்தில் பேஸ்புக் நிறுவனர் மார்க்ஜூக்கர் பெர்க் புகைப்படம் ஒன்றை தனது சமூக வளைதளப்பக்கத்தில் வெளியிட்டார். அந்த புகைப்படமே, அவரது பிரைவேஸிக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தலை வெளிப்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் 500 மில்லியன் லைக்ஸ் பெற்றதை கொண்டாடியபடி அந்த புகைப்படத்தில் மார்க்ஜூக்கர் பெர்க் இருப்பார். அதில் கவனித்து பார்த்தால் ஒரு விஷயம் புரியும். அதில் உள்ள அவரது லேப்டாப்பை உற்றுபாருங்கள், அதில் வெப் கேமராவையும், மைக்ரோபோனையும் டேப் போட்டு ஒட்டி அவர் மறைத்திருப்பார். இணையதள ஹேக்கர்களிடம் இருந்து தனது பிரைவேஸியை பாதுகாக்க இத்தகைய பாதுகாப்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார். ஆயிரம் பாதுகாப்பு வசதிகளை உள்ளடக்கிய அவரே இப்படி என்றால், நாமும் இந்த ஐடியாவை பின்பற்றினால் ஹேக்கர்களிடம் இருந்து தப்பிக்கலாம். சரியா? .