Breaking News

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின் 65 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான கண்காட்சி

( என்டன்)

புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின்  65 ஆவது ஆண்டு நிறைவையொட்டி முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பான  கண்காட்சி   இன்று  நடைபெற்றது .


இலங்கையை சேர்ந்த புலம்பெயர்வாளர்களின் வாழ்வையும் பிரயாசையையும் அடைவுகளையும் கொண்டாடும் முகமாக புகைப்படங்கள், சித்திரங்கள், கதைகள் , குறும்படங்கள், போன்றவற்றை உள்ளடக்கியதாக  இடம்பெற்ற கண்காட்சி புலம்பெயர்தலுக்கான சர்வதேச அமைப்பின்  கிழக்குமாகாணத்திற்கான  பொறுப்பதிகாரி எம் .ஜெயராஜன் தலைமையில்  புலம்பெயர்தலுக்கான சர்வதேச நிறுவனத்தின்  மட்டக்களப்பு கிளையில் இன்று நடைபெற்றது .

இந்த கண்காட்சியில் முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல் தொடர்பாக மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் காலி மாவட்ட பாடசாலைகள் மட்டத்தில் நடத்தப்பட்ட ஓவிய போட்டிகளில் தெரிவு செய்யப்பட ஓவியங்கள் ,புகைப்படங்கள் மற்றும் முறையற்ற விதத்தில் புலம்பெயர்தல்  தொடர்பான கானொளிகளும்  இன்று இடம்பெற்ற கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டது .  


இந்த கண்காட்சியினை பார்வையிடுவதற்காக அரச திணைக்கள அதிகாரிகள் ,அரச சார்பற்ற நிறுவன பிரதிநிதிகள் , பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்